Immunity Boosters

Up next


அகத்தியர் அருளிய சகல நோய்களை நீக்கும் ருத்ர காயத்ரி மந்திரம் | Rudra Gayatri Mantra in Tamil | Video

1,105 Views
BoS
60
Published on 18 Aug 2019 / In Religous

Best Gayatri Mantra in Tamil | Full Video and Audio | Download

This Video is about Rudra Gayatri Mantra given by Agathiyar Siddhar in his "Agathiyar 12000" book.

அகத்தியர் அருளிய சகல நோய்களை நீக்கும் ருத்ர காயத்ரி மந்திரம்.

ருத்திர காயத்திரி, விஷ்ணு காயத்திரி, பிரம காயத்திரி என்கிற மூன்று காயத்ரி மந்திரங்களைப் பற்றியும் அதன் பிரயோகம் மற்றும் அதனால் விளையும் பலன்களை பார்க்க இருக்கிறோம். இந்த மந்திரங்கள் யாவும் அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

இம் மூன்று காயத்ரி மந்திரங்கள் எத்தனை உயர்வானவை, அதன் சிறப்புகள் என்னென்ன என்பதை அகத்தியர் பின்வரும் பாடல்களில் விளக்குகிறார்.

காயத்ரி மந்திரம் பற்றிய பாடல்:

சுழிவான மந்திரமாஞ் சூச்சந்தன்னை
செப்புகிறேன் புலத்தியனே தெளிவாய்கேளு
காரப்பா பிரமகாயத்திரியென்று
கருணைவளர் விஷ்ணுகாயத்திரியொன்று
நேரப்பா ருத்திர காயத்திரியொன்று
நிசமான காயத்ரிமந்திரங்கள் மூன்றுஞ்
சாரப்பா ருத்திர காயத்ரியோத
சகலவித ரோகமெல்லாம் சாந்தமாமே.

ஆமப்பா விஷ்ணு காயத்ரியோத
அப்பனே சந்தான சவுபாக்கியங்கள்
தாமப்பா ஒன்றுபத்தாய் தானேயுண்டாஞ்
சதங்கையுடன் பிரம காயத்திரியோத
ஓமப்பா சகலகலைக் கியானமெல்லாம்
உண்மையுடன் அஷ்டாங்க சித்தியாகும்
நாமப்பா சொன்ன காயத்ரி மூன்றும்
நாதாந்த நயனமடா சத்தியமாமே.

அகத்தியர் அருளிய “ருத்ர காயத்ரி மந்திரம்”

புத்தியுடன் சொல்லுகிறேன் சுத்தமாக
போதமுடன் ருத்திர காயத்திரிகேளு
பக்தியுள்ள ரகசியமிது மவுனவித்தை
பாலகனே கெவுனாதி செபிக்குமார்க்கஞ்ச்
சுத்தமுடன் சொல்லுகிறேன் ஓம்சிறீங்றீங்மகா
மசிமசி நசிமசிருத்ராய சுவாகாயென்றோதிப்பாரே.


ருத்ர காயத்ரி மந்திரம்

"ஓம் சிறீங் றீங் மகா மசிமசி நசிமசி ருத்ராய சுவாகா"

"OM SIREENG REENG MAGA MASIMASI NASIMASI RUDHRAYA SWAGA"

ருத்திர காயத்ரி மந்திரத்தை செபிப்பவர்கள் அனைத்து நோய்களும் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார் அகத்தியர்.

காயத்ரி மந்திரங்களை செபிக்கும் முறை:

தினந்தோறு மவுனமதால் தியானஞ்செய்ய
திறமான ரகசியமா மந்திரந்தன்னை
ஓதுவது நூத்தெட்டு உருவேதானும்
அய்யனே மண்டலம்தான் சொல்லக்கேளு
கூவிமன மசையாமல் மவுனமாக
கூர்மையுடன் னந்திசந்தி உருசெய்யே

#aalayamselveer #rudragayatrimantra

Show more
0 Comments sort Sort By

Facebook Comments

Up next